Our Original Compositions

Praise Songs by Rev. S. Simeon Jebaraj

These songs of praise were composed to glorify the Lord and uplift the hearts of believers. Click on any song to read the full lyrics.

1

Yakobuku kalipum israveluku magilchiyum

யாக்கோபுக்கு களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும்

பாடல்-1

யாக்கோபுக்கு களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகுமே

மகிழ்ந்து களிகூருவாய் கர்த்தரில் என்றென்றுமே

அல்லேலூயா அல்லேலூயா 4


1.

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு

உன் தேவனாகிய கர்த்தர் பெரிய காரியம் செய்வார்

அதிசயங்கள் காணச் செய்வார் -2


2.

யூதாவே கலங்காதே மகிழ்ந்து களிகூரு

உன் இரட்சிப்பாகிய கர்த்தர் காரியங்கள் மாறச் செய்வார்

மாறுதலாய் முடியச் செய்வார் - 2


3.

சீயோன் குமாரத்தியே மகிழ்ந்து களிகூரு

உன் ராஜாவாகிய கர்த்தர் ராஜாவாக வருகிறார்

மேகங்களில் மீண்டும் வருகிறார் - 2

2

Isravele isravele kattapaduvai nee

இஸ்ரவேலே இஸ்ரவேலே கட்டப்படுவாய் நீ

பாடல்-2

இஸ்ரவேலே இஸ்ரவேலே கட்டப்படுவாய் நீ கட்டப்படுவாய் - 2

கர்த்தர் உன்னை கட்டுவார் நீ கட்டப்படுவாய் - மீண்டும்


1.

அலங்கம் இடிந்ததும் அதின் வாசல் எரிக்கப்பட்டும்

பிதாக்களின் நகரம் பாழாக்கப்படும்

மகா தீங்கையும் நிந்தையையும் அனுபவிக்கும்

நீ மறுபடியும் கட்டப்படுவாய் - 2


2.

பெருங்காற்று மழையும் மோதியடிக்கும்

கப்பல் உடைந்தும் நன்மைகள் நஷ்டப்பட்டும்

இனி தப்பி பிழைப்போம் என்ற நம்பிக்கை இழக்கும்

நீ மறுபடியும் கட்டப்படுவாய் - 2


3.

உன் கழுத்தின் மேல் சத்துருவின் நுகம்

அந்நியர் உன்னை அடிமையாக்கினாரே

நுகத்தை உடைத்து கட்டுகளை அறுப்பேன்

நீ மறுபடியும் கட்டப்படுவாய் - 2

3

En vinnapathai kelum en yesuve

என் விண்ணப்பத்தை கேளும் என் இயேசுவே

பாடல்-3

என் விண்ணப்பத்தை கேளும் என் இயேசுவே

உம்மை நான் கூப்பிடுவேன்

என் கண்ணீரை பாரும் என் இயேசுவே

அழுது நான் ஜெபித்திடுவேன்


1.

ஆகாரை போல நான் வனாந்திரத்தில் தனித்து நிற்கின்றேனே

பிள்ளையின் அழுகுரல் கேட்பது போல விண்ணப்பம் கேட்டிடுமே


2.

தாவீதை போல வனாந்திரத்தில் இழந்து நிற்கின்றேனே

திடப்படுத்தி திரும்ப கொடுத்தது போல விண்ணப்பம் கேட்டிடுமே


3.

பேதுரு போல வாழ்க்கையிலே பிரயாசம் வீணாயிற்றே

வார்த்தையினாலே நிரப்பினதுபோல விண்ணப்பம் கேட்டிடுமே

4

Appa um samugathulaa

அப்பா உம் சமூகத்துல நான் நிற்கிறேன்

பாடல்-4

அப்பா உம் சமூகத்துல நான் நிற்கிறேன்

அப்பா உம்மை நோக்கி நானும் கதறுகிறேன்

என் கூப்பிடுதல் கேளும் என் கதறுதல் கேளும்

என் விண்ணப்பத்தின் சத்தத்திற்கு தூரமாகாதேயும் - 2


1.

உலர்ந்து போன எலும்புகள் போன்ற நிலைமை ஆச்சுதே

சேனையாய் எழுப்ப அப்பா நானும் கதறுகிறேன் - 2


2.

தேசம் எழுப்புதல் காண வேண்டிய நேரம் ஆச்சுதே

பின்மாரி ஊற்ற அப்பா கதறுகிறேன் - 2


3.

அப்பா நீங்க திரும்ப வர காலம் ஆச்சுதே

மணவாட்டியாய் என்னை மாற்ற அப்பா கதறுகிறேன் - 2

5

Neega matum than atha seiya mudiyum

நீங்க மட்டும் தான் அத செய்ய முடியும்

பாடல்-5

நீங்க மட்டும் தான் அத செய்ய முடியும்

உம்மாலே மட்டும் தான் அது கூடும் - 2

சர்வ வல்லவரே எங்கள் எல்ஷடாய்

சர்வ வியாபியே எங்கள் ஏலோகிம் - 2


கூடும் கூடும் எல்லாம் கூடும்

ஆகும் ஆகும் எல்லாம் ஆகும்


1.

உலர்ந்த எலும்பு உயிர் பெற உம்மால் கூடும்

சேனையாக்கி நிலைநிற்க உம்மால் ஆகும்


2.

வறண்ட நிலம் நீரூற்றாக உம்மாலே கூடும்

வனாந்தரம் செழிப்பாக்க உம்மால் ஆகும்


3.

பேதையை ஞானியாக்க உம்மால் கூடும்

ஆகாததையும் பயன்படுத்த உம்மால் ஆகும்

6

Enmel ethanai kirubaiyai irukindir

என்மேல் எத்தனை கிருபையாய் இருக்கின்றீர்

பாடல்-6

என்மேல் எத்தனை கிருபையாய் இருக்கின்றீர்

உங்க கிருபைக்கு ஸ்தோத்திரம் ஐயா

நான் நிற்பதும் உங்க கிருபை தான்

நிர்மூலமாகாததும் உங்க கிருபை தான்

கிருபை தான் உங்க கிருபைதான்


1.

தாயின் கருவில் தாங்கினதும் கிருபை தான்

இதுவரையும் சுமந்ததும் கிருபை தான் - 2

உள்ளங் கையில் வரைந்து வைத்தீர்

கண் முன்னே நிறுத்தி வைத்தீர்

உம் கிருபைக்காகவே என்றும் ஸ்தோத்திரம்


2.

தனிமையில் தாங்கினதும் கிருபை தான்

தாய் போல தேற்றியதும் கிருபை தான் - 2

தள்ளாட விடவில்லையே தாங்கியே நிறுத்தினீரே

உம் கிருபைக்காகவே என்றும் ஸ்தோத்திரம்


3.

தாழ்வினில் தாங்கினதும் கிருபை தான்

தகப்பன் போல சுமந்ததும் கிருபை தான் - 2

தவறிட விடவில்லையே தகுதிப்படுத்தினீரே

உம் கிருபைக்காகவே என்றும் ஸ்தோத்திரம்

7

Yehova devanai aarathipom

யெகோவா தேவனை ஆராதிப்போம்

பாடல்-7

யெகோவா தேவனை ஆராதிப்போம்

நன்றியுள்ள உள்ளத்தோடு ஆராதிப்போம்


முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு

ஜீவனுள்ள தேவனை ஆராதிப்போம்


ஆராதனை ஆராதனை - 4


யெகோவா யீரேவை ஆராதிப்போம்

எல்லாமே நமக்காய் பார்த்துக்கொள்வார்


யெகோவா ஷம்மாவை ஆராதிப்போம்

எந்நாளும் கூட இருப்பவரே


யெகோவா ஷாலோமை ஆராதிப்போம்

எந்நாளும் சமாதானம் தருபவரே


யெகோவா நிசியை ஆராதிப்போம்

எந்நாளும் வெற்றி தருபவரே


யெகோவா ராஃபாவை ஆராதிப்போம்

எந்நாளும் சுகம் தரும் பரிகாரி


யெகோவா மெக்கதேஷை ஆராதிப்போம்

எந்நாளும் எங்கள் பரிசுத்தரே

8

Thuthipen thuthipen thooyavarai

துதிப்பேன் துதிப்பேன் தூயவரை

பாடல்-8

துதிப்பேன் துதிப்பேன் தூயவரை துதிப்பேன்

துதிகளில் பாத்திரரே

துதிப்பேன் தூயாதி தூயவரே

துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரையே



1.

சர்வ வல்லமை உள்ளவரே

சகல அதிகாரம் உடையவரே

சர்வ வியாபியும் ஆனவரே

சர்வ லோக ஆளுனரே



2.

பெரிய காரியங்கள் செய்பவரே

பெரிய அற்புதங்கள் செய்பவரே

பெரிய அதிசயங்கள் செய்பவரே

பெரிய தேவனுமானவரே

9

Ithanai kirubai ennil neer vaithida

இத்தனை கிருபை என்னில் நீர் வைத்திட

பாடல்-9

இத்தனை கிருபை என்னில் நீர் வைத்திட

என்னிடத்தில் என்ன கண்டீர்

இத்தனை தயவு என்னில் நீர் வைத்திட

என்னிடத்தில் ஒன்றுமில்லையே


இத்தனை கிருபை இத்தனை தயவு

ஏழை என் மீது இயேசுவே வைத்தீரே



1.

பாவி என்று உலகம் சொல்லி

குற்றவாளியாக தீர்த்து

நியாயத்தீர்ப்பில் என்னை நிறுத்தியதே

நியாயம் தீர்க்க வல்லவரோ

நீதியின் சால்வை தந்து

நீதிமானாய் மாற்றி விட்டாரே



2.

ஏழை என்று உலகம் சொல்லி

ஏளனமாய் என்னை பார்த்தது

முடிந்துவிடும் என்று சொல்லியதே

வானம் பூமி படைத்தவரோ

ஜீவனுள்ள வார்த்தை தந்து

வாழ்வினை மாற்றி விட்டாரே



3.

சிறுவன் என்று உலகம் சொல்லி

எளியவன் என்னை தள்ளி

தனிமையில் என்னை நிறுத்தியதே

உலகத்திலும் பெரியவரோ

தாழ்வினில் என்னை தூக்கி

பலத்தவனாய் மாற்றி விட்டாரே

10

Arputhangal intrum arputhangal nam

அற்புதங்கள் இன்றும் அற்புதங்கள்

பாடல்-10

அற்புதங்கள் இன்றும் அற்புதங்கள்

நம் தேவன் செய்கிறார்

அதிசயங்கள் இன்றும் அதிசயங்கள்

நம் தேவன் செய்கிறார்


அவர் நாமம் எல்ஷடாய்

அவர் நாமம் எபினேசர்

அவர் நாமம் எல்ரோயீ

அவர் நாமம் எலோஹிம்


எல்லாம் செய்யவல்ல உன்னத தேவன் அவரே என்றும் நம்முடைய தேவன்



1.

வார்த்தையாலே அவர் சிருஷ்டிப்பார்

வார்த்தையாலே அவர் புதிதாக்குவார்

வார்த்தையாலே அவர் ஜீவனை தருவார்

வார்த்தையாலே அவர் உயிர்ப்பிப்பார்

வார்த்தையாலே அவர் குணமாக்குவார்

வார்த்தையாலே அவர் அற்புதம் செய்வார்



2.

ஆவியாலே அவர் அபிஷேகம் செய்வார்

ஆவியாலே அவர் பெலன் தருவார்

ஆவியாலே அவர் நுகம் முறிப்பார்

ஆவியாலே அவர் கட்டுகள் உடைப்பார்

ஆவியாலே அவர் விடுதலை தருவார்

ஆவியாலே அவர் அற்புதம் செய்வார்

11

Ithuvarai kaathathu um kirubai

இதுவரை காத்தது உம் கிருபை

பாடல்-11

இதுவரை காத்தது உம் கிருபை

இதுவரை சுமந்ததும் உம் கிருபை


கிருபையில்லாமல் ஒன்றுமில்லை – உங்க

கிருபையில்லாமல் நானில்லை


கிருபை – 8



1.

கிருபையினாலே பாவங்களை மன்னித்தீர்

கிருபையினாலே இரட்சிப்பை தந்தீர்

கிருபையினாலே நீதிமானாக்கினீர்

கிருபையினாலே நிலைநிற்க செய்தீர்



2.

கிருபையினாலே சேற்றிலிருந்து எடுத்தீர்

கிருபையினாலே உம் இரத்தம் கொண்டு கழுவினீர்

கிருபையினாலே வாழ்வினை மாற்றினீர்

கிருபையினாலே உம் சித்தம் செய்ய வைத்தீர்



3.

கிருபையினாலே அபிஷேகம் செய்தீர்

கிருபையினாலே வரங்களை தந்தீர்

கிருபையினாலே ஊழியனாக்கினீர்

கிருபையினாலே பயன்பட செய்தீர்

12

Devan seiya ninaithathu nindru

தேவன் செய்ய நினைத்தது நின்று போவதில்லை

பாடல்-12

தேவன் செய்ய நினைத்தது நின்று போவதில்லை

யார் தடுக்க நினைத்தாலும் நின்று போவதில்லை


எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்

எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்



1.

திட்டங்கள் தருவதும் தேவ கிருபையால்

நிறைவேற்றி முடிப்பதும் தேவ கிருபையால்

நம் பெலத்தால் அல்ல தேவ ஆவியால்



2.

அற்புதங்கள் நடப்பதும் தேவ கிருபையால்

அதிசயம் நடப்பதும் தேவ கிருபையால்

நம் திறமையால் அல்ல தேவ கிருபையால்



3.

உயர்வுகள் வருவதும் தேவ கிருபையால்

மேன்மைகள் கிடைப்பதும் தேவ கிருபையால்

நம் உழைப்பால் அல்ல தேவ கிருபையால்

13

Vaanathi vanagalil veetirikum

வானாதி வானங்களில் வீற்றிருக்கும்

பாடல்-13

வானாதி வானங்களில் வீற்றிருக்கும்

பரம பிதாவே பரலோக ராஜாவே

உம்மையே ஆராதிப்பேன்



1.

ஆதியும் நீரே அந்தமும் நீரே

அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே

ஆராதிப்பேன் உம்மையே

ஆவியில் ஆராதிப்பேன்



2.

நல்லவர் நீரே வல்லவர் நீரே

காண்பவர் நீரே காப்பவர் நீரே



3.

உயர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே

பரிசுத்தர் நீரே பரிகாரி நீரே

14

Thanithu vida pata neragalil

தனித்து விடப்பட்ட வேளைகளில்

பாடல்-14

தனித்து விடப்பட்ட வேளைகளில்

பயந்து தவித்து உள்ளம் கலங்குகையில்

உதவிட யாருண்டு என்று ஏங்குகையில்

தகப்பனே நீரேயல்லாமல் யாருமில்லை


இயேசுவே எல்லாம் நீரே

தகப்பனே எப்போதும் நீரே


உலகில் யாருண்டு ஊரில் யாருண்டு

உறவில் யாருண்டு நண்பர்களும் பலருண்டு

தேவையின் நேரத்தில் முகம் பார்த்து ஏங்குகையில் தகப்பனே

நீரேயல்லாமல் யாருமில்லை


உதவிட பலருண்டு நலம் விரும்பும் பலருண்டு

தேற்றிட பலருண்டு ஆற்றவும் பலருண்டு

இக்கட்டு நேரத்தில் தவித்து ஏங்குகையில் தகப்பனே

நீரேயல்லாமல் யாருமில்லை

15

En vinnapathai kelum en yesuve

என் விண்ணப்பத்தை கேளும் என் இயேசுவே

பாடல்-15

என் விண்ணப்பத்தை கேளும் என் இயேசுவே

உம்மை நான் கூப்பிடுவேன்

என் கண்ணீரை பாரும் என் இயேசுவே

அழுது நான் ஜெபித்திடுவேன்



1.

ஆகாரை போல நான் வனாந்திரத்தில் தனித்து நிற்கின்றேனே

பிள்ளையின் அழுகுரல் கேட்டது போல விண்ணப்பம் கேட்டிடுமே



2.

தாவீதை போல வனாந்திரத்தில் இழந்து நிற்கின்றேனே

திடப்படுத்தி திரும்ப கொடுத்தது போல விண்ணப்பம் கேட்டிடுமே



3.

பேதுரு போல வாழ்க்கையில் பிரயாசம் வீணாயிற்றே

வார்த்தையினாலே நிரப்பினது போல விண்ணப்பம் கேட்டிடுமே